தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

17/10/2010

அயோத்தி மேல்முறையீடு!

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.



சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி....பிபிசி.தமிழோசை.

No comments:

Post a Comment