தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

17/10/2010

வேலைவாய்ப்பு.?? ..17/10/2010


வேலைவாய்ப்பு:இது நமது சமுதாய இளைஞர்கள் சிந்திக்க எழுதிய கட்டுரை.....(உன்மையான வேலைவாய்ப்பு அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....நன்றி..........இனி தொடருங்கள்..........
இராமநாதபுரம் முழுவதும் சுவர் நோட்டீஸ் பளிச்சென மின்னுகிறது. இளைஞர் கூட்டம் அந்த நோட்டீஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.
யு.ஏ.இ. அபுதாபியில் உள்ள மப் அல் மப் என்ற கம்பெனிக்கு பட்டதாரி கிளினர்கள் தேவை. மாத ஊதியம் இந்திய மதிப்பு பத்தாயிரம், ஓவர்டைம் உண்டு, பாஸ்போர்ட் காப்பியுடன், கோர்ட் டை கட்டி சூப்பர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், பாலிடெக்னிக், டிகிரி சர்டிபிகேடடுகளுடன் இண்டர்விக்கு வரவும். முன் பணம் பத்தாயிரம் கட்டி பதிவு செய்யவும். விசா கட்டணம் 80,000/= மட்டுமே. பணம் தோது செய்ய முடியவில்லை என்றால் பெற்றோர்களிடம் சொல்லி நிறைய சீதனப்பணம் தரும் வீடாக பார்த்து தவ்ஹீத் பேசினாலும் த.மு.மு.கவில் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்ட வேண்டிய விசா பணத்துக்கு மேலே சென்னை வந்து போக, மெடிக்கல் போட, சூட்கேஸ், அட சூ சாக்ஸ் வாங்க மொத்த ரேட் போட்டு பெண்வீட்டாரிடம் சீதனப் பணம் வாங்கிக் கொள்ளவும்.
B.T.C, B.C.C, B.F.C, B.B.C படித்தவர்களும் பாலிடெக்க்னில் T.C, C.C, O.B படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். முன்பு வளைகுடாவில் கிளினிக் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தால் சான்று தேவை.

பரபரப்பாகிறது இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள அதுவும் நம் சமுதாயத்தவர் அதிகம் உள்ள இளைஞர் கூட்டம்.
அது என்ன? B.T.C, B.C.C, B.F.C, B.B.C நாம படிக்காமே போனோமே. நாம ஒன்பதாவது பாதியிலே, பத்தாவது பெயில்...........

B.T.C — BACHELOR OF TOILET CLEANING,

B.C.C — BACHELOR OF CLASS CLEANING,

B.F.C — BACHELOR OF FLOOR CLEANING,

O.B — OFFICE BOY (six month course) எப்படி சாயாப் போடுவது......

T.C — ONLY TOILET MAF.

இதுதானா டிகிரி என அசந்து போகிறது இளைஞர் கூட்டம். TOILET CLEANING செய்ய படிப்பா?
குறிப்பு :- இதனை காமெடியாக எழுதக் காரணம் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்போர்ட் இருந்தால் போதும் வெளிநாடு வந்து அள்ளிச் சேர்க்கலாம் என பல இளைஞர்கள் குறிப்பாக நம் சமுதாயத்தவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்படித்தான் கிளினிக் கம்பெனியில் TOILET கழுவுகிறார்கள் அதுவும் வெறும் 700/= திரஹம் இந்திய மதிப்பு 8000/=ம் இதில் டெலிபோன் செலவு பாதி ….......

இளைஞர்களே........ தயவு செய்து படிப்பை பாதியில் நிறுத்தாமல் தகுதிவாய்ந்த படிப்பாக சிவில், கெமிக்கல், மெக்கானிக், ஆட்டோ மொபைல், லிஃப்ட் ஆப்ரேட்டர், ஏ.சி. மெக்கானிக் இப்படி ஒன்றை தேர்வு செய்யுங்கள்........நம் நாட்டிலேயே நல்ல வேலை கிடைக்கும். வேண்டாம் சீதனப் பணம் இதயம் செத்து தரும் பிச்சைக்காசு."


—புதுமடம் : கரீம் மதீனா — முத்தகீன்.யுஏஇ

No comments:

Post a Comment