தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

16/06/2010

2011.பஞ்சாயத்துத்தேர்தலில்......

எல்லாப் புகழும் இறைவனுக்கே
பஞ்சாயத் தேர்தலில் நிற்க நான் தயார்

என்னருமை இளைய சமுதாயமே.........
உனது தோல் வலிமையும், ஆதரவு கிடைத்தால்.........

இளைஞர்களும்-மாணவர்களும் களத்தில் இறங்கினால் புது புரட்சி வெடிக்கும்....


வெற்றி கிடைக்கும்.......அடுதுத்து வர இருக்கின்ற புதுமடம் பஞ்சாயத் தேர்தலில்

(இன்ஷா அல்லாஹ்) நான் போட்டியிட நினைத்துள்ளேன் .....


.உங்களின் உறுதியான ஒத்துழைப்புடன்.-!

பொதுநலத்தில் அக்கரையும், தன்னார்வமும், மக்கள் விழிப்புணர்வும், மாணவர்களை அரவணைத்து செல்லுதலும் எனது இரத்தத்தில் ஊறியது.

என்னிடம் பொருளாதார வசதிகளோ, கட்சிகளின் பலமோ, விளம்பரப்படுத்தும் வாய்ப்போ,

பந்தாக்களோ எதுவும் எதுவும் இல்லை இயக்கங்களையோ-அமைப்புகளையோ கமிஷன் கட்சிகளையோ

சாராமல் உங்களின் ஒருவனாக இருந்து செயல்படுவேன்.



என்னை தேர்ந்தெடுத்தால்:-



(1) சுகாதாரத்தை மேம்படுதுவேன், வீட்டுக்கு வீடு குப்பைகளை எடுக்க முயற்சிப்பேன். தாமரைக்குளம் போல் இல்லாவிட்டாலும் முழு சுகாதாரம் என்பதில் கவனம் செலுத்துவேன்.



(2) மழை நீர் பெய்து சாலைகளில் தேங்கும் நீர்களை உடனுக்குடன் எடுக்கவும், கழிவுநீர் தெருக்களில் தேங்காமல் நடவடிக்கை எடுப்பேன்,



(3) சாலை வசதிகளை செப்பனிடுவேன்,



(4) அரசு நலத்திட்டங்களை நம் கிராமத்திற்கு கொண்டுவர அரசாங்கத்தின் கதவுகளை பலமாகத் தட்டுவேன்,



(5) முதியோர் பென்ஷன், திருமண உதவித்திட்டம், கல்விக்கான உதவிகள், மேற்படிப்பு இவைகளுக்கு விடாமல் போராடுவேன்,



(6) பேருந்து நிலையம் கட்ட(என் காலத்திலேயே) முயற்சிப்பேன்,



(7) மீனவர்கள் நலன், கடனுதவி பெற்றுத்தறுவேன்,



(8) கூவமாகிப் போன தரவையை தடுத்து மாற்று வழி காண்பேன்,



(9) மாணவர்கள் நலனை கருத்தில் கொள்வேன் அவர்களுக்காக ஒத்துழைப்பேன், வீதிக்கு வந்து போராடுவேன்,



(10) வரும் காலத்தில் ஐ.டி.ஐ, நர்ஸிங் கோர்ஸ் போன்ற ஏதாவது ஒரு தொழிற்கல்வி வர போராடுவேன்


இப்படி பொது மக்கள் நலனிலே என் சிந்தனை இருக்கும்.

நானா போஸ்ட் ஏறி லைட் போட என்ற வடிவேலு காமெடி அடிக்க மாட்டேன்.


கமிஷன் பேரமோ-முகச்சுளிப்போ-இழுத்தடிப்போ-பஞ்சாயத் தலைவர் என்ற பந்தாவோ என்னிடம் இருக்காது.


நீங்கள் என்னைத் தேடி வர வேண்டாம், நான் உங்கள் வீடு தேடி வருவேன்.


மாதந்தோரும் பஞ்சாயத் சபை கூட்டம் போட்டு உங்கள் குறைகளை கேட்பேன்.


பிரியாணி பொட்டலமோ, போண்டா-வடையோ, பணக்கவர்களோ, கொடுக்காமல் எனது உழைப்பை மட்டும் நம்பி உங்களிடம் ஓட்டுக் கேட்பேன்.


வரும் தேர்தலில் கத்தி போய் வாள் வந்த கதையாக ”பணக்கார கூட்டம் நிற்க போவதாக தெரிகிறது. இது புதுமடத்தி வளர்சிக்கு முட்டுகட்டையாகும்


எத்தனையோ பஞ்சாயத் தலைவர்களை பார்த்துவிட்டீர்கள்,சளித்துவிட்டீர்கள், திட்டியும் விட்டீர்கள், இம்முறை எனக்கு வாய்ப்பளித்தால் “புதுமடம் புதுப்பொழிவு பெறும்”.


இறைவன் நாடினால் ......... கருத்துகள் உங்களிடம் அலசிப்பாருங்கள்.



பொது நலத் தொண்டன்

முத்தகீன்

No comments:

Post a Comment