
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரஹ்...இந்த வெப்தளம் புதுமடம் செய்திகளுக்காக!
தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011
புதுமடம்செய்தி/தமுமுக செய்திகள்
நீங்கள் இறந்தபின்....
29/12/2010
புதுமடத்தில் பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியாசார்பில் பிரச்சாரம்!

27/12/2010
tntj நிறுவனத்தார் ஆர்ப்பாட்டம் ஏன்?
அரசியல்வாதிக்கு பலத்தை காட்டி எதையோசாதிக்க அன்னன் முடிவுசெய்துவிட்டார்போல ....அரசியலே சாக்கடை என்றுசொன்னஅன்னன் தானாக சென்று ஆதரவுகொடுக்கிறார் என்னங்கடா கொடுமை?எதச்சொன்னாலும் ஆட்டுமந்தயாக தலையாட்ட ஆட்கள் இருக்கும்போது அன்னன்பாடு கொண்டாட்டம்தான்..
26/12/2010
புதுமடம்தவ்ஹீத்வாதியின்,,,வரதட்சனைமிரட்டல்
23/12/2010
புதுமடம் சகோதரர்களுக்கு தமுமுக புதுமடம் கிளை வேண்டுகோள்!
அன்பார்ந்த புதுமடம் சகோதரர்களே புதுமடத்தில் நடத்த ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது கூட்டம் நடத்துவதற்கு ஏற்ப்பாடுசெய்யக்காரணம் நமது ஊரில் சமீப காலமாக நடந்த சம்பவங்கள் நமது மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் குறிப்பாக நமது ஊர்மக்களுக்கும் அசிங்கத்தை ஏற்ப்படுத்துவதாக உள்ளது மற்றும் மாற்றுமதத்தினர் நம்மை ஏலனமாக பார்க்கக்கூடியநிலையும் உள்ளது காரணம் நம்மிடம் ஒற்றுமையில்லை என்பதை மற்றவர்கள் சரியாகபயன்படுத்திக்கொண்டு தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக நடத்திமுடித்துவிடுகிறார்கள் அதற்கு நம்மில் சிலரும் பலிகடா ஆகிறார்கள் ஆகவே சகோதரர்களே சமீபகால நிகழ்வுகள் அனைத்தையும் பேச்சாளர்களுக்கு விளக்கிச்சொல்லி இதற்கான காரனங்களையும் நமது மக்களுக்கு விளக்கிசொல்லவும் இன்ஷாஅல்லாஹ் மபெரும் பொதுக்கூட்டமாக நடத்த தீர்மானித்து அதற்கான ஏற்ப்பாட்டினை செய்துவருகிறோம் இக்கூட்டத்திற்கு நிறைய சிலவினங்கள் உள்ளன ஆகவே நமது ஊர் சகோதரர்கள் உதவிசெய்தால் பேருதவியாக இருக்கும் என அன்போடுகேட்டுக்கொள்கிறோம்.
இவன்...........மீராஹிசைன் செயளாலர் .தமுமுக.புதுமடம்
குறிப்பு;சவுதியில் உள்ளவர்கள் உதவிசெய்யநினைத்தால்..சகோதரர் ஜித்தா இபுராஹிம் அவர்களை தொடர்புகொள்ளவும் .....
கடைசிநேரத்தகவல்: பேச்சாளர்கள் தேதி கிடைக்காத காரனத்தால் தேதி முடிவுசெய்தபின் அறிவிப்பதாக தமுமுக செயலாளர் தகவல் தந்துள்ளார்.
22/12/2010
ஊரைபற்றி சிந்திக்க சிலநிமிடம்!3
அக்பர்ஷா என்ற சகோதரன் தாக்கப்படும் முன் தினம் நடந்த நிகழ்வுகளை இறைவனைப்பயந்தவனாக சொல்லக்கடமைபட்டிருக்கிறேன் நான் தமுமுக அழுவலகத்தில் அமர்ந்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன் மாலை நேரம் அந்தநேரம் கபூரின் மகன் (பெரியவன்)என்னிடம்வந்து (நடந்தசம்பவத்தை எப்படிப்பட்டவார்த்தகளினால்நடந்ததுஎன்பதை அதேபானியில் எழுதுகிறேன்)கபூர்மகன்: என்னோட அத்தாவ இப்படிசெஞ்சதுசரியா?அவரு தப்பானவனாவேஇருக்கட்டும் தப்புத்தான்செஞ்சுட்டார் அதுக்குஇப்படிஅடிக்கிறது எங்ககுடும்பத்த அவமானப்படுத்துரதுசரியா
நான்: என்னநடந்துச்சுண்டுஎனக்குதெரியாது
க.மகன்:எப்படிதெரியாமப்போகும்
நான்:அடிச்சதாசொன்னாங்க ஆனா என்ன சம்பவம்னுஎனக்கு சரியாதெரியாது
(எனக்கு முழுவிபரம்தெரியாவிட்டாழும் அடித்ததின் காரனம் தெரியும் ஆனால் நான்காட்டிக்கவில்லை)
க.மகன்:சம்பவத்தை விவரிக்கிறான் ,,,,,,,,,அடிச்சது 3பேர்தானாம்
நான் : அதுஎப்படி 3பேர்மட்டும் அடிப்பாங்க என்ன பகையா அப்படில்லம் இருக்காது கூட்டீட்டுவரும்போது யாராவது கோவத்துல சின்னதாஅடிச்சிருப்பாங்க அதுக்கு நீ 3பேரமட்டும்குறிவச்சுசொல்ரதுசரியில்ல
இப்படிநான் மறுத்து அவனுடயகோபத்தை தனிப்பதற்குபதில்சொல்லிக்கொண்டுஇருக்கும்போது அக்பர்ஷா அந்த இடத்தைகடந்துசெல்லுகிர்றார் பார்த்துவிட்ட அவன் தம்பி அக்பர்ஷா என்று அழைக்கிறான் அக்பர்ஷாவும் ஏன் என்று கேட்டுக்கொண்டு அருகே வருகிறார் இனி அக்பர்ஷாவுடன் நடந்த உரையாடல்:
கபூர் மகன்:நத்தாவ ஏன் அடிச்ச
அக்பர்ஷா: உங்க அத்தா செஞ்சதுசரியா?
கபூர்மகன்:நத்தாதப்புத்தான்பன்னீட்டான்(கவனிக்க:இந்தவார்த்தைதான் உபயோகிக்கப்பட்டது)அதுக்கு நீ ஏன் அடிச்ச?
அக்பர்ஷா;உங்கத்தா தப்புபன்னினாரு அடிச்ச
கபூர்மகன்:தப்புசெஞ்சாஅடிக்க நீ யாரு?அவ்ந்தப்புத்தான்பன்னீட்டான் அதுக்கு ஜமாத் இருக்கு இல்ல போலீஸ் இருக்கு நீ ஏன் அடிச்ச(கவனிக்க:ஏன் அடிச்ச என்று அக்பர்ஷா வை மட்டும் பிரித்துக்கேட்பதிலேயே அவன் பேச்சு இருக்கு)
அந்தநேரத்தில் யாருக்கோபோன் செய்து கபூர் மகன் தகறாறு பன்றார்(மரியாதயானவார்த்தைகளே உபயோகிக்கப்படுகிறது)உடனே பஸ்ஸ்டேண்ட் வாங்க என்று யாருக்கோ அழைப்புவிடுகிறார்.அந்த இடத்தைவிட்டும் அகன்றுவிடுகிறார் அக்பர்ட்ஷா...(இந்தவாக்குவாதம் நடக்கும்போது கபூர்மனைவி இன்னொருமகன் சிலிண்டர் திருட்டுப்புகழ்:சதாம் அந்த இடத்திற்குவருகிறார்கள்..அக்பர்ஷா அழைத்தநபர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகிறார் .வந்தநபருடன் ........இபுறாஹிம். இனி ....
கபூர்மகன்:தம்பி இபுறாஹிம் எங்கத்தா என்னதப்புசெஞ்சாரு ஏன் அடிச்சீங்க
இபுராஹிம்:அன்னே உங்க அத்தாசெஞ்சது வெளியெ சொல்லமுடியாத அசிங்கம் அந்தமாதிரிபன்னீருக்காரு
(வாக்குவாதம் மரியாதையுடன் தான் தொடர்கிறது)
கபூர்மகன்:அதுக்கு நீங்க அடிப்பீங்களா?நீங்கயாரு அடிக்க?
இபுராஹிம்:உங்க அக்கா தங்கச்சிக்கு இந்தமாதிரி (எந்தமாதிரி என்பது அனைவருக்கும்தெரியும் விளக்கம்வேண்டாம்)நடதுச்சுண்டா நீங்க அடிப்பீங்களா இல்லையா?
கபூர்மகன்:கண்டிப்பா அடிப்பன் ஆனா முதல்ல குடும்பத்தாருக்குசொல்லனுமா இல்லையா?
இபுராஹிம்:என்னங்கசொல்ரீங்க சின்னப்புள்ளங்கள ...................................(வேண்டாம்) அடிக்காம என்ன செய்ரது
க.மகன்:தப்புசெஞ்சா நீங்க அடிக்க நீங்க என்ன அரசாங்கமா?இல்ல ஜமாத்தா?
இபுராஹிம்:அதான் ஜமாத்துலதான விட்டோம்
க.மகன்:அடிச்சு அவமானப்படுத்தித்தான விட்டூங்க
இடையில்நான்:என்ன அவமானம் ஊருல எத்தனையோ சம்பவம் நடந்து ஜமாத்துக்கு வரலயா.தப்பு செஞ்சா அசிங்கம் வரத்தான்செய்யும்.
க.மகன்:இல்லன்னே இவனுக 2பேரும் ரெம்ப அடிச்சிருக்கன்க ........தொடரும்.
சிந்திக்கசில நிமிடம்:தொடர் 2
வெளிநாடுவாழ் புதுமடம் சகோதரர்களே! தொடர்:2
சமீபத்தில் நடந்தசம்பவங்கள் சம்பந்தமாக அமீரகத்தில் இயங்கும் பிவா என்ற அமைப்பில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களைசெய்துவருகின்றனர் புதுமடத்துசகோதரன் தாக்கப்பட்டுவிட்டான் புதுமடத்தில் இயங்கும் அமைப்பினர் மற்றும் ஜமாத்தினர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் கபூர் என்ற கயவனைப்பற்றி விவரிக்கும்போது அவன் தமுமுக வுடன் தொடர்பு உள்ளவன் போலவும் விவரித்து மெயில்கள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் புதுமடத்து சகோதரன் யார் மெயில் ஐடி தெரிந்தாலும் உடனே அனுப்பிவிடுகின்றனர்.ஏன் இந்த விமர்சனம்? கபூரைப்பற்றி தெரியப்படுத்துவதற்கு தமுமுக வை அடையாளப்படுத்த என்ன அவசியம்? மீன்விற்ப்பவர் என்று சொன்னால் தெரியாதா? சரிபோகட்டும். ஒரு நிறுவனத்தில் ஒருவனை சம்பளத்திற்கு நியமிப்பதுஇல்லையா? அவனை வேலைவாங்குவதுஇல்லையா? வேலைக்கு சேர்க்கப்பட்டவன் சரியானமுறையில் நடந்துகொள்ளாதகாரனத்திற்கு விளக்கப்படுவதுஇல்லையா?அதைப்போலத்தான் கபூர் என்பவர் வேலைபார்த்தது உன்மை (சில நாள் துனை செயலராக இருந்ததும் உண்மை)அவருடைய நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவரை அமைப்பைவிட்டும் ஆபீஸ் நடவடிக்கையில் இருந்தும் விளக்கப்பட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் மெயிலில் (பிவா)காணப்படும் வாசகம் சிலமாதங்கள் முன்புவரை என வர்னிக்கப்பட்டுள்ளது.ஏன் பிவாவிற்க்கு இந்தநிலைபாடு.எந்த அமைப்பையும் சாராதது என சொல்லிவிட்டு தமுமுக விற்க்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமில்லை. இதற்குகாரணம் ? ஊரில் ஒருசம்பவம் நடந்துவிட்டால் உடனே வெளிநாட்டில் உணர்ச்சி(பலர் ஊர்விசயத்தில் அக்கரைகாட்டுவதில்லை)வசப்பட்டு இப்படியான செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்பது எனது கருத்து.ஒருவிசயம் நடந்துவிட்டால் அதைக்கேட்டு உணர்சிவசப்படக்கூடாது உணர்ச்சிவசப்பட்டு சிலவார்த்தைகள் சொன்னதால் தான் சமீபத்தில் நமது சகோதரன் தாக்கப்பட்டசம்பவம் நடந்தது...தாக்குதலுக்கு உள்ளான அக்பர்ஷா எந்த அமைப்பைசார்ந்தவர் என்றாலும் அல்லது அமைப்புகளைசாராதவர் என்றாலும் புதுமடத்தச்சேர்ந்த சகோதரன் என்ற பார்வையில்தான் அடிப்படையில்தான் நாம் ஈடுபட்டு பிரச்சினைகளை களையநினைத்தோம் ஆனால்.....................................................................????????????????????????தொடரும்.
இந்தகட்டுரையில் எதேனும் தவராகவோ அல்லது யாரையும் பாதிப்பதாக நினைத்தால் ..உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலில் அனுப்புங்கள்.முகவரி:www.senyrta@gmail.com.
இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்.3அடுத்துவரும்.
கிராம அதிகாரி ஊருக்கு வருவாரா?மக்கள் வேதனை

புதுமடம் கிராம அதிகாரி ஊருக்குவருவது கிடையாது அவரைப்பார்க்க புதுமடத்துமக்கள் தினமும் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிச்செல்கிறார்கள் vaoஅவர்களுக்கு புதுமடம் மற்றும் சிறிய கிராமம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது புதுமடம்தான் பிரதான ஊர் என்றாலும் அவரைப்பார்க்கமுடிவதில்லை காரனம் அவரைப்பார்க்க அவருடைய வீட்டிற்கே சென்று பனத்தைக்கொடுத்து தன் காரியங்களை சாதித்துக்கொள்ளும் சிலரால் பணம்கொடுத்துசாதிக்க முடியாத பலர் மாதக்கனக்காக சில வேலைகளுக்காக அவரைப்பார்க்கமுடியாமல் தினமும் கிராம அதிகாரி அழுவலகம் சென்று திரும்புகிறார்கள் .காரனம் என்ன என்று விசாரித்தால்...அவர் சாதாரன அதிகாரியில்லையாம் மாவட்ட ஆட்சியர்கூட அவர்மேல் எந்தநடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவிற்க்கு செல்வாக்கு உள்ளவர் என நமது ஊர் நண்பர் சொகிறார் அப்படி கலக்டரே ஆக்ஷன் எடுக்கமுடியாதவர் என்றால் அவருக்குப்பின்னால் நமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எம்பி க்கு வேண்டியவர் என சொல்லிக்கொள்பவர் இருக்கிறார் என சந்தேகப்படுவதாக வும் சொல்லப்படுகிறது ஊருக்கே வராத கிராம அதிகாரி தேவைதானா? தற்போதய கிராம அதிகாரி இராமநாதபுரம் பத்திரப்பதிவு அழுவலகம் அருகே பிரமாண்டமான பங்களாவில் வசிக்கிறார் அவருக்கு 4டாடாசுமோ 2மாருதிவேன் ஆட்டோ பினாமிபெயரில் ஓடுவதாக எமது முகவை நன்பர் சொல்லுகிறார் ஆக அவருக்கு வசதியில் குறைவில்லை நிரைய சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த அதிகாரி நமது சமுதாயத்தைச்சேர்ந்தவர்தான் ஆனாலும் சமுதாயப்பாசம் அக்கரை என்பது துளியளவும் கிடையாதாம் பனம்கொடுத்தால் மட்டுமே வேலை நடக்குமாம் இப்படியானவன்கள் வந்து சமுதாயத்திற்கு என்ன நன்மை?
16/12/2010
ஊர்நிலவரம் பற்றி சிந்திக்க சிலநிமிடம்?
வெளிநாடு வாழ் புதுமடம் சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ். ..சில விளக்கங்களும் சில சிந்தனைக்கருத்துக்களும் .நமது ஊரில் சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது (இன்னும் நடந்துகொண்டும் இருக்கலாம்? )அதற்காக சட்டத்தை நாம் கையில் எடுக்கமுடியாது?முறையான அனுகுமுறையுடன் செயல்பட்டால் நாம் நமது இலக்கை அடையமுடியும் அதற்கு விளம்பரமோ அல்லது நான் தான் செய்தன் என்ற கர்வமோ நம்மிடம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நம்முடைய இலக்கை அடையமுடியாது.வீனான பிரச்சினைகளைத்தான் சந்திக்க நேரிடும்.இதற்கு உதாரனம் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள்.........(தொடரும்)
தினமும் இதன் தொடர்ச்சி வரும் இன்ஷாஅல்லாஹ்.
__தொடர்.1____________________________________________________
தொடர் 2
15/12/2010
ஏண்?தாக்கப்பட்டார்?பின்னனிஎன்ன?
என்பது குறிப்பிடத்தக்கது) ஆறுபேரும் சேர்ந்து அடித்திருக்கிறான்கள் அப்படியும் சமாளித்துக்கொண்டு இருக்கும் போது கட்டையைவைத்து பின்புறத்தலையில் ஒருவன் அடித்தவுடன் அக்பர்ஷாவிற்கு மயக்கம் வந்து தலைசுற்றி கீழே விழுந்துவிட்டதாகவும் விஷயம் பரவி நமது இளைஞர்கள் ஓடிவரவும் அடித்தவர்கள் ஓடிவிட்டதாகவும் சொல்லுகிறார் ஏன் அடித்தார்கள் என்ன தனிப்பட்ட விரோதமா?என்று அக்பர்ஷாவிடம் கேட்டேன் அதற்கு எனக்கும் அவனுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது சதாம் என்பனுடைய அத்தா மிககேவலமாக சிறு குழந்தைகளிடம் நடந்துகொண்டார் நாங்கள் பிடித்து வடக்குத்தெரு ஜமாத்தில் ஒப்படைத்தோம் பிடித்துவரும்போது லேசாக அவனுடைய அத்தா கபூரை அடித்தோம் அதற்கு பழிவாங்கத்தான் அடியாள் வைத்து அடித்திருக்கிறான் என அக்பர்ஷாசொல்லுகிறார். அதாவது பலிவாங்கத்தான் அடித்திறுக்கிறான்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது ஊருக்குள் பேத்திவயதில் இருக்கும் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பு உண்டாக்கி சமுதாயத்திற்கு கேவலமான சின்னங்களாக அடையாளங்களாக இருக்க நினைக்கும் இப்படிப்பட்ட கபூர்போன்ற ஆட்களை சமுதாய அக்கரை உள்ள யாரும் அடிக்காமல் கொஞ்சவாசெய்வார்கள்?
குறிப்பு: அக்பர்ஷா இராமநாதபுரம் அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டு தலையில் அடிபட்டதால் ஸ்கேன் செய்யப்பட்டு
நலமாக உள்ளார் 4நாள் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என மருத்துவர் அறிவுரித்தியுள்ளார்;
புதுமடத்திலிருந்து:எம் எஸ் எம்.
14/12/2010
உச்சிப்புளியில் புதுமடம்சகோதரன்தாக்கப்பட்டார்
தாக்குதல் நடத்தியவர்கள் சதாம் (சிலிண்டர்திருட்டில் கைதாகி சமீபத்தில் வெளியேவந்தவன்) நெடுமாறன்மகன் ஒருவன் ஆக இருவரும்சேர்ந்து பலமாக அடித்திருப்பதாக தெரிகிறது அடித்தவர்கள்மேல் ரித்தீஸ் mpசிபாரிசின்பேரில் இருவர்மேல் firபதிவுசெய்ய போலீஸாருக்கு அறிவுரித்துள்ளார் என தெரிகிறது
அடிபட்டவரின் நிலவரம் நேரில் பார்த்து விட்டு பிறகு தகவல் தெரிவிக்கப்படும் எதற்க்காக தாக்குதல் நடந்தது என்றவிபரம் நேரில் பேசியபிறகு தரப்படும்..இன்ஷா அல்லாஹ்
தண்ணீருக்குள் வீட்டுமனை.


புதுமடத்திலிருந்து:எம் எஸ்.எஸ்.
13/12/2010
புதுமடம் தமுமுக ஆலோசனைக்கூட்டம்
12/12/2010
அசுரவேகத்தில் ஆட்டோ.பாலத்தில்விபரீதம்!
அதன்விபரம்:12 .12.2010இரவு 8மனிக்கு புதுமடம் பாலத்தில் இருசக்கரவாகனமும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன அதில் மேற்குத்தெருவைச்சேர்ந்த ஒருவரும் கிழக்குத்தெருவைச்சேர்ந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்த இருவரும் இருசக்கரவாகனத்தில் வந்தவர்கள் சிறுநீர்களிக்க பாலத்தில் நிறுத்தி இறங்க முற்படும் நேரத்தில் புதுமடத்திலிருந்து சென்ற ஆட்டோ அசுரவேகத்தில் வந்து நேராக மோதியதால் அதே இடத்தில் இருவருக்கும் தலையில்பலமாக அடிபட்டு இரத்தம் கொட்டவும் மோதிய ஆட்டோ பயந்து நிறுத்தாமல் சென்றுவிட்டது அடிபட்டவர்களை ஆஸ்பத்திரி எடுத்துசெல்ல 108ஆம்புலன்ஸிற்கு தகவல்கொடுத்தும் 40நிமிடமாக வந்துசேராததால் உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.இருவரையும் தலைமைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மோதிய ஆட்டோபற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது விசாரனை நடைபெறுகிறது..
குறிப்பு:அடிபட்டஒருவருக்கு மிக சீரியஸ் கண்டிஷன் என தெரிகிறது..
புதுமடத்திலிருந்து:எம்.எஸ்.எஸ்.
07/12/2010
தினகரன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி!
06/12/2010
தமுமுக டிசம்பர்6 போராட்டம் நடைபெற்றது!



டிசம்பர்.6தொடர்முழக்கப்போராட்டம்!இறைவனின் நாட்டத்தால்!
இராமநாதபுரத்தில் பாபர்பள்ளிவாசல் இடித்ததினமான டிசம்பர்6அன்று காலை 10மனிமுதல் தொடர்கண்டன முழக்கப்போராட்டம்நடைபெற்றது தமுமுக மாவட்டத்தலைவர் சலீமுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கனக்காணோர் கலந்துகொண்டனர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை செய்யது உரைநிகழ்த்தினார். வெற்றிகரமாக நிகழ்த்திமுடிக்கப்பட்டது தமுமுக தொண்டர்படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி காவல்துறையினருக்கு சிரமம் கொடுக்காமல் பார்த்துக்கொண்டனர்.பல ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் கலந்துகொண்டனர் பென்களும் திரலாக கலந்துகொண்டது சிறப்பாக இருந்தது புதுமடத்திலிருந்து சுமார் 100பேர்கள் கலந்துகொண்டனர் கூட்டத்தில் இராமநாதபுரம் நகராச்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது வரும் வெள்ளிக்கிழமைக்குள் நகரத்திற்குள் தோண்டப்பட்ட குழிகளைமூடப்படவேண்டும் வண்டிக்காரத்தெருவில் தேங்கிநிற்கும் தன்னீரை வெளியேற்றி சாலையைசீரமைக்கவேண்டும் என்று தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது தவரினால் ....நகராச்சியை மூடும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கைவிடப்பட்டது..இறுதியில்மாவட்டசெயலாளர்.சாதீக்பாட்ஷா நன்றிகூறினார்.
புதுடத்திலிருந்து....எம் எஸ்.சீனிமுஹம்மது.
05/12/2010
டிசம்பர் 6 தமுமுக ஆர்ப்பாட்டம்
புதுமடத்திலிருந்து எம் எஸ் முஹம்மது.
24/11/2010
தவ்ஹீத்வாதியும் வரதட்சனையும்!

19/11/2010
piwa கூட்டம் /17/11/2010

17/11/2010.அன்று அபுதாபியில் piwa சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது .சுமார் 50 உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. வந்துகலந்துகொண்டவர்களுக்கு டிபன் டீ கொடுத்து உபசரிக்கப்பட்டது.piwa அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கவி முத்தகீன் கவிதைவாசித்தார்;
குறிப்பு: இந்த கூட்டத்தில் 50நபர்களுக்குமேல் வந்துகலந்துகொண்டதாக நிர்வாகி(பிவா)தெரிவித்துள்ளார்.தவறுக்கு வருந்துகிறோம் அதிகமான நபர்கள் கலந்துகொண்டதில் சந்தோஷமே.சுமார்: 95பேர்கள் கலந்துகொண்டுள்ளனர் என நிர்வாகி தெரிவித்துள்ளார்.(24,11,2011)
16/11/2010
09/11/2010
அபுதாபியில் கூட்டம்/அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ் பெருநாள் மறுநாள் ( 16 நவம்பர் அல்லது 17 நவம்பர் )மாலை சுமார் 6.00 மணி அளவில் PIWA - அமீரக புதுமடம் இஸ்லாமிய சமுதாய நலச்சங்கம் சார்பாக நமது ஊர் சகோதரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .இந்த சகோதர கலந்துரையாடல் மற்றும் சந்திப்பிற்கு UAE வாழ் புதுமட சகோதரர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்...நமது ஊர் சமுதாய நலன் கருதி அணைத்து சகோதரர்களும் நிச்சயமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இத்தகவலை மெயில் வசதியில்லாத உங்கள் பகுதியில் உள்ள நமது ஊர் சகோதரர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இடம்> - ருசி ரெஸ்டாரென்ட் , அபுதாபி
மேற்கொண்ட தகவலுக்கு கீழே உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
தலைவர் : சாதீக் சலாமத், அபுதாபி, 00971-552385249
துணை தலைவர் : முஹம்மது பக்கிர் கனி, துபாய், 00971-506449059
செயலாளர் :ஆஸீக் இலாஹி, துபாய், 00971-50-8062475
துணை செயலாளர்: பதாக்,அபுதாபி, 00971-55-7043143
பொருலாளர் :அஜுருன் அலீம், அபுதாபி,00971-509095252
துணை பொருலாளர் :சபீர் அஹமது, துபாய், 00971-55-2141610,
கிர்மானி : 0506261685
31/10/2010
ஜமாத் சார்பில் ஆட்டோ?
ஜமாத்தார்கள் இந்த விசயம் பற்றி ஜமாத்தில் பேசுவதாக கூறியுள்ளனர் .பேசி செயல் படுத்தினால் நிச்சயமாக ஊருக்கு நன்மைதான் பேசி வெற்றியடைய வைப்பார்களா? பார்ப்போம்,
23/10/2010
இண்டெர்நெட் இணைப்பு வைத்திருப்போர் கவனத்திற்கு
http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image.
Your browser may not support display of this image. Your browser may not support display of this image.
17/10/2010
அயோத்தி மேல்முறையீடு!
சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி....பிபிசி.தமிழோசை.
வேலைவாய்ப்பு.?? ..17/10/2010

இராமநாதபுரம் முழுவதும் சுவர் நோட்டீஸ் பளிச்சென மின்னுகிறது. இளைஞர் கூட்டம் அந்த நோட்டீஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.
யு.ஏ.இ. அபுதாபியில் உள்ள மப் அல் மப் என்ற கம்பெனிக்கு பட்டதாரி கிளினர்கள் தேவை. மாத ஊதியம் இந்திய மதிப்பு பத்தாயிரம், ஓவர்டைம் உண்டு, பாஸ்போர்ட் காப்பியுடன், கோர்ட் டை கட்டி சூப்பர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், பாலிடெக்னிக், டிகிரி சர்டிபிகேடடுகளுடன் இண்டர்விக்கு வரவும். முன் பணம் பத்தாயிரம் கட்டி பதிவு செய்யவும். விசா கட்டணம் 80,000/= மட்டுமே. பணம் தோது செய்ய முடியவில்லை என்றால் பெற்றோர்களிடம் சொல்லி நிறைய சீதனப்பணம் தரும் வீடாக பார்த்து தவ்ஹீத் பேசினாலும் த.மு.மு.கவில் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கட்ட வேண்டிய விசா பணத்துக்கு மேலே சென்னை வந்து போக, மெடிக்கல் போட, சூட்கேஸ், அட சூ சாக்ஸ் வாங்க மொத்த ரேட் போட்டு பெண்வீட்டாரிடம் சீதனப் பணம் வாங்கிக் கொள்ளவும்.
B.T.C, B.C.C, B.F.C, B.B.C படித்தவர்களும் பாலிடெக்க்னில் T.C, C.C, O.B படித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். முன்பு வளைகுடாவில் கிளினிக் கம்பெனியில் வேலைப் பார்த்திருந்தால் சான்று தேவை.
பரபரப்பாகிறது இராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள அதுவும் நம் சமுதாயத்தவர் அதிகம் உள்ள இளைஞர் கூட்டம்.
அது என்ன? B.T.C, B.C.C, B.F.C, B.B.C நாம படிக்காமே போனோமே. நாம ஒன்பதாவது பாதியிலே, பத்தாவது பெயில்...........
B.T.C — BACHELOR OF TOILET CLEANING,
B.C.C — BACHELOR OF CLASS CLEANING,
B.F.C — BACHELOR OF FLOOR CLEANING,
O.B — OFFICE BOY (six month course) எப்படி சாயாப் போடுவது......
T.C — ONLY TOILET MAF.
இதுதானா டிகிரி என அசந்து போகிறது இளைஞர் கூட்டம். TOILET CLEANING செய்ய படிப்பா?
குறிப்பு :- இதனை காமெடியாக எழுதக் காரணம் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பாஸ்போர்ட் இருந்தால் போதும் வெளிநாடு வந்து அள்ளிச் சேர்க்கலாம் என பல இளைஞர்கள் குறிப்பாக நம் சமுதாயத்தவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இப்படித்தான் கிளினிக் கம்பெனியில் TOILET கழுவுகிறார்கள் அதுவும் வெறும் 700/= திரஹம் இந்திய மதிப்பு 8000/=ம் இதில் டெலிபோன் செலவு பாதி ….......
இளைஞர்களே........ தயவு செய்து படிப்பை பாதியில் நிறுத்தாமல் தகுதிவாய்ந்த படிப்பாக சிவில், கெமிக்கல், மெக்கானிக், ஆட்டோ மொபைல், லிஃப்ட் ஆப்ரேட்டர், ஏ.சி. மெக்கானிக் இப்படி ஒன்றை தேர்வு செய்யுங்கள்........நம் நாட்டிலேயே நல்ல வேலை கிடைக்கும். வேண்டாம் சீதனப் பணம் இதயம் செத்து தரும் பிச்சைக்காசு."
—புதுமடம் : கரீம் மதீனா — முத்தகீன்.யுஏஇ
15/10/2010
ஜெயேந்திரக்கொழுப்பு.
ஜெயேந்திரக் கொழுப்பு
எழுதியவர் மாதவராஜ் எழுதப்பட்டது 10:23 AM அடைமொழி அயோத்தி, அரசியல், இந்துத்துவா, சங்கராச்சாரியார், செய்திகள், நிகழ்வுகள்
தண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்றமெடுக்கும் தனது திருவாய் மலர்ந்தருள ஆரம்பித்திருக்கிறார். 2.10.2010 தினத்தந்தியில் ‘ஜெயேந்திரர் கருத்து’ என செய்தி வந்திருக்கிறது.
“இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
“அதை முஸ்லீம்களே விரும்பமாட்டர்கள். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. இதனால் இன்னொரு மசூதியைக் கட்ட விரும்பமாட்டார்கள்”
அவர்கள் விரும்பக்கூடாது என்பதுதான் இதில் உள்ள செய்தி. இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற தொனியில்லாமல், இந்துக்களோடு முஸ்லீம்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற அரசியலும் இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது.
இருக்கிற மசூதிகள் முஸ்லீம்களுக்கு போதும் என்று சொல்லியவர், அடுத்து மேலும் சில படிகள் ஏறிச் செல்கிறார்.
“முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலிருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்”
ஆக, முஸ்லீம்களுக்கு மசூதியே தேவையில்லை என கடைசிப்படியில் நின்று சொல்லியே விடுகிறார்.
ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது, சீதைக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற பக்தர்கள் அனைவருக்குமான தெளிவுதானே. அப்படியானால் ராமர் வேறு எங்குமே இல்லையென்பதை இந்த ‘பீடாதிபதிகள்’ ஒத்துக்கொள்கிறார்களா? அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள்? அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?
பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான்.
இந்தப் பூசாரிகள் மௌனமாகிப் போக மாட்டார்கள்.
நண்பர் மயிலை பாலு அவர்கள், இந்தச் செய்தியை குறிப்பிட்டு, தீக்கதிர் பத்திரிகையில் எழுதி, “இந்தக் குசும்புதானே வேணாங்குறது..” என முடித்திருக்கிறார்.
இது குசும்பு இல்லை, கொழுப்பு.
நன்றி:தமிழ்மனம்..மாதவராஜ்
தீர்ப்பு அல்ல துரோகம்./அயோத்தி தீர்ப்பு
"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.
"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.
"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.
அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.
இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.
'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,
'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.
இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.
இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?
'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.
'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?
1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.
அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.
நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.
"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).
ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.
இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?
தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.
அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).
இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.
நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.
இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.
மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.
இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.
ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.
இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
நன்றி:அசுரன்..சென்னை.
13/10/2010
03/10/2010
நாம் தலை குனிகிறோம்.//

"இறைவா எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் பாதை தவறிவிடாமல் காப்பற்று "
(1) கன்று மாடும் சேர்ந்தே வரும் SMS அனுப்பிட்டேன் அத்துடன் "சூப்பர் பிட்டும்" அனுப்பியிருக்கேன். அவள்க ஆட்டோவுல வருவாளுக.......நம்ம மாப்புதான் கூட்டிட்டு வருவான்...... அவள இங்கிட்டு வரவைக்க பெரும்பாடுபட்டேன்..... வாடா வந்து …....க்கி தொலை....
டேய் பார்ட்டி மினிலே ஏறி மப்ஸல பிடிச்சு பழைய பஸ்டாண்டுல நிக்கும் நான் பெரிசுட்ட தள்ளிட்டு, பெருசு காசுல ஃபுள் வாங்கி வெட்டிட்டு வருவேன்......
இந்த டயலாக்குகளும் இன்னும் இதயமே வெடித்துவிடும் டயலாக்குகளும் நம் கிராமத்து வீதிகளில் மிக சமீபகாலமாக, சர்வசாதரணமாக "டிரைவர்"களிடம் மேலும் இராமநாதபுரத்தில் அவரவருக்கு பிடித்த மளிகை,ஜவுளி, நகை கடைகாரர்களிடம் கேட்கும் அவமானத்திற்கு தள்ளப்பட்டோம்.......
சரி கட்டுரைக்கு வருவோம் நம் குடும்பத்தைக் காப்பாற்றவும் நடுத்தரமாய் நாகரீகமாக வாழவும் அடுத்த வீட்டாரைப் போல் எல்லா வசதிகளுடன் வாழவும் இதன் விடக் கொடுமையாக பெண் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க நம் வீட்டில் பிறந்த விட்ட கஷ்டத்திற்காக நகையும்,நட்டும், சீதனமும், சீராட்டும், மஞ்சள் பையும் கொடுக்க உணர்ச்சியற்ற இயந்திரமாய் பொருளையீட்டி வீட்டுக்கு அனுப்புறோம்.
(தவ்ஹீத் சகோதரர்களே இன்னும் நம் கிராமத்தில் வரதட்ச்சணை இல்லாத திருமணம் பகிரங்கமாகவில்லை.......கேட்பது கிடைப்பதால் இதனைப் பற்றி பேசுவதும் இல்லை)
இப்போதும் பலருக்கு போனில் ரிங்டோனாய் "காசு பணத்தை தேடுங்க" இரண்டாவதும் உட்கார்ந்திச்சு என்றே ஒலிக்கும்.
இதையும் மிஞ்சி பொருளாதரம் சேரச் சேர (எந்த வகையிலும்)
மாதாமாதம் உண்டியலாய் போய் சேரும்.........கார்கோவும் போய் சேரும்.
இவைகள் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்ய வேண்டியது கடமை என்றாலும் நவீன உலகத்தில் இண்டர்நெட் என்னும் மாய வலையில் நம் குடும்பம் சீரழிந்து போவதற்கும் நாமே காரணமாகிறோம்.
நம் பெண்கள் வறுமையை கண்டதில்லை,
எந்த பஸ், எந்த ஆட்டோ, எந்த வேனில் ஏறினாலும் நோய்க்கு காட்ட அதுவும் குத்தகை டாக்டரிடம் காட்ட,
சொந்த வாகனமாய் இருந்தால் இராம்நாட் போய் சேரும் வரை டிரைவர் காது குளிர, உச்சி கொட்ட, ரகசியம் தெரிய,கணவனை பற்றி, சொந்தக் கதை, சோகக் கதை, எப்போது ஊருக்குவருவார் பிள்ளைக் கொடுப்பார் என்ற பேச்சுகள்.......
ஒரே வாகன டிரைவரை வாடிக்கையாளராக்கி செல் போன் நம்பர் கொடுத்து "சிலுங்கள்" பாலான பாலான சிலுங்களாய்......
சுப்பு நம்ம டிரைவரை வரச் சொல்லுங்க என்ற கெஞ்சல்.......
இப்படி நமது குடும்பத்து பெண்கள் அறிந்தும் அறியாமலும் அவர்கள் வலையில் வீழ்ந்து இன்று மானம் வீதிக்கு வந்துவிட்டது.
நடுத்தர, செண்டர், நல்ல குடும்பத்து பெண்கள் என்பதால் சில நேரம் மூடிமறைக்கப்படுகிறது.
எந்த நாயை இவர்கள் தேடினார்களோ அந்த நாய் இவர்களை நக்கி ருசி பார்த்து அடுத்த நாயிடம் சொல்கிறது.
எனவே பொருளீட்ட வருவது முக்கியமல்ல "நமது கண்காணிப்பு "மிக மிக முக்கியம்...... சந்தேகப்பட வேண்டாம் முறையான் அணுகுமுறை கையாள வேண்டும்.
நாம் நொந்து நூடூல்சாகி கையை பிசைவதற்கு முன், தலை குனிவை பெறுவதற்கு முன்.
விழித்துக் கொள்ள வேண்டும், கையடக்க செல்போனில் நம் சொந்தகாரர்களை தவிர தவறான நம்பர் எனில் கண்டுபிடித்து " " காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும்.
அவசரம், அவசியம் இல்லாமல் வாகனங்களில் (சொந்த வாகனமாகவும் இருந்தாலும் சரி) பெண்கள் பயணிப்பதை தடுக்க வேண்டும்.
இடங்களுக்கு செல்லும் போது பெரியவர்களை துணைக்கு அழைத்துச் செல்ல கட்டளை இட வேண்டும். இப்படி முறையான கவனிப்பு இல்லாமல் போனால் மேற்படியார்களுக்கு ஊறுகாயும், அவலும் இலவச இணைப்பாக கிடக்கும். நடுத்தரம் இப்போது நாறுகிறது.
—புதுமடம் கரீம் மதீனா(முத்தக்கீன்)—யு.ஏ.இ.
28/09/2010
இல கணேசன் புரட்டுக்களுக்கு பதில்..
08/09/2010
உலகப்பணக்காரர்களில்.......
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 5, 2010, 12:47[IST]
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்னர் என்று கணக்கொடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அங்குள்ள வெளிநாட்டவர்கள் வரி இன்றி, சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர்.
உலகின் மிகப் பெரிய வெளிநாட்டுப் பணக்காரர்கள் நிறைந்த நாடு குறித்த ஒரு கணக்கெடுப்பை ஹெச்.எஸ்.பி.சி. நடத்தியது. அதில் ரஷ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடம் பஹ்ரைனுக்கும், 3வது இடம் சவூதி அரேபியாவுக்கும் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
கடந்த முறை ஐந்தாவது இடத்தில் இருந்து வந்த எமிரேட்ஸ், ஒரு படி முன்னுக்கு வந்து நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் வருவாய், செலவு, சேமிப்பு, முதலீடு, பொருளாதாரத்தின் தாக்கம் ஆகியவற்றை 25 நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுடன் ஒப்பிட்டப்பட்டது.
அந்த அடிப்படையில், சொகுசாக வாழ உகந்த நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் பிற பகுதிகளில் வாழும் வெழிநாட்டவர்களை விட இங்கு வாழ்பவர்கள் அதிகமான கார்களை வைத்துள்ளனர். இங்கு வசிப்பவர்கள் விடுமுறைகள், நிறைய சொத்து, வீட்டு வேலைக்கு ஆள் என சுகபோகமாக வாழ்கின்றனர். வரி இல்லாதது தான் இவர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய ஊக்கமாக உள்ளது என்று அந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டைச் சேர்ந்தவர்களை விட 94 சதவிகித வெளிநாட்டவர்கள் குறைந்த வரியைத் தான் செலுத்தியுள்ளனர்.
வருவாயை மதிப்பீடு செய்ததில் வெளிநாட்டவர்கள் தாங்கள் சார்ந்த நாட்டை விட அதிக அளவில் வரி செலுத்த வேண்டியிருந்தது. அதிகமாக சம்பாதிப்பது மட்டுமின்றி நிறைய சேமிக்கவும் செய்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பில் பங்குபெற்றவர்களில் 79 சதவிகிதத்தினர் தாங்கள் வெளிநாட்டவர்கள் ஆன பிறகே அதிகம் சேமித்ததாகக் கூறுகின்றனர்.
04/09/2010
புதுமடத்தில் தகராறு! 5 மானவர்களுக்கு காயம்!04/09/2010
இன்று நடந்த அடிதடியில் 5 பேருக்கு காயம் ஏற்ப்பட்டதாக தகவல்...இராமநாதபுரத்தில் செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் நமது சகோதரர்களை கிழக்குத்தெருவைச்சேர்ந்த தினகரன் மற்றும் மானிக்கம் அன் கோ..வினர் அடித்து இரத்தக்காயம் ஏற்ப்படுத்தியுள்ளனர்.
ஏன் எதற்கு அடித்தார்கள் என்பதை விளக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் விரைவில் தரப்படும்.
குறிப்பு: அடிபட்டவர்களை ஆஸ்பத்திரியில் (ராம்நாட்)காட்டி அஜ்மல்ஷெரிப்(piwa.pdm.நிர்வாகி)அவர்கள் கேஸ் கொடுக்க போவதாக கடைசிதகவல்.
29/08/2010
விலைவாசி ஏறிப்போச்சு 15 லட்சம் பத்தாது.கூடப்போட்டுகொடு!

23/08/2010
ரகசியம் காக்கும்..piwa
22/08/2010
14/08/2010
12/08/2010
04/08/2010
மாணவர்கள் ஜாக்கிரதை..?4/8/2010
செய்வது.புர்காபோட்டுக்கொண்டுசெல்லும்பென்களைஆபாசமான வார்த்தைகளால்விமர்சிப்பது...மானவிகள் வீடுகளுக்குபோன்செய்யும்போது பெற்றோர்கள்பேசநேரிட்டால் மானவியின்பெயரைச்சொல்லி..கூடப்படிக்கும்மாணவன்.நெருக்கமானநண்பன்
என்றும்சொல்லிவிட்டுபோனைவைத்துவிடவேண்டியது.அந்தமாணவியின்
பெற்றோருக்குதன் மகள் மேல் சந்தேகம்ஏற்ப்பட்டு.சண்டை ஏற்ப்படுகிறது..இப்படி செய்வது யார்?வெளிநபர்யாரும்இல்லை உள்ளூர்தான்.சென்றஆண்டு 10ம்வகுப்பு 11ம்வகுப்பு..12ம்வகுப்பு..பில் பெயில் ஆனமாணவர்கள்தான்..நெருப்புபசங்கள்....என்ற பெயரில்....(.10முதல் 25பேர்கள்வரை.) இப்படிப்பட்ட ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள்..அவர்கள் யார் யார் என்பதையரிய.ரகசியவிசாரனை.நடந்துவருகிறது.அதில்.சிலர்தெரிந்துவிட்டது
இன்னும்சிலர்யார்?என்பதைவிசாரித்துவருகிறார்கள்.கூடியவிரைவில் இந்தநெருப்புபசங்க!கம்பியும் என்னலாம்................
தகவல்...சென்னையிலிருந்து..நலன்விரும்பி,
26/07/2010
டாக்டர்.ஜஹிர்நாயக்’
24/07/2010
புதுமடத்திற்குஒருகவிதை?24/07/2010
புதுமடம் இன்றும் பழைய மடம்............இளைய சமுதாயமே
உங்கள் பார்வைக்கு.......................கவிதையுடன் நமதூர் படங்கள்
அவலங்களுடன்..........பஞ்சாயத் நிர்வாகமே பார் ! பார் !
இப்படங்களைத்தான் சிங்காரப் ”புதுமடம்" சீரழிந்து போகிறதே.................
காவேரி வற்றினாலும்
வற்றாத "அழகு - தரவை"குப்பைகளை கொட்டிக் கொட்டி
கூவமாக மாறியதென்ன கொசுக்கடிக்கு ஆளாவதென்ன?
போட்டி போட்டு விக்குறாங்க புறம்போக்கு நிலங்களைத்தான்
தரவையையும் கூறுபோட்டு தானமாக கொடுத்திடாங்க.............
கேட்பதற்க்கு நாதியில்லை
கேட்டாலும் பெரும்புள்ளிகளின் தொல்லை........வாகனங்களுக்கபஞ்சமில்லை
ரோட்டுல ஓட்டினா குலுக்களுக்கும் பஞ்சமில்லை
குண்டும் குழியுமான புதுமடத்து ரோட்டை
கண்டுக்காம இருக்குதுபஞ்சாயத் நிர்வாகமும் நாமலும் தான்
“மண்ணும்- கருப்பும்"மாறி மாறி போட்டசிமெண்ட் ரோடு
“மண்ணா போச்சே"கருப்பு தெரிஞ்சு கருங்கல்லா ஆச்சுகமிஷன் "மாடிவீடாய் "மாறியாச்சு (ஏ.சி. வீடு)கல் தடுக்கி விழுகுறாங்க கடுப்புல திட்டுறாங்கமண்ணும்-கருப்பும் எப்படி கேட்கும்...........
7ம் நம்பர் பஸ்ஸும் சிவராமும் மினி பஸ்ஸும் ஓமினியும்
வளைப்பதற்கு தடுமாறி சளைச்சுப் போவார்கள் பஸ் ஸ்டாண்டே இல்லாத
புதுமடம் பஸ் ஸ்டாண்டில்...........மழைக்கும் வெயிலுக்கும்
மக்கள் நிற்பார்கள் பஸ் ஸ்டாண்ட் கட்ட நிலம் கேட்டால்
தரவையை காண்பிக்கும் பஞ்சாயத் நிர்வாகமே தரவை விற்பனையான
“கதை" தெரியாமல் போனதென்ன?
இப்படி புதுமடத்தில் எதுவும் இல்லை
ஆனா............ பஞ்சாயத் தேர்தலில் நிற்க மட்டும்
கோஷ்டி சண்டை மாணவர்கள் குரல் கொடுத்தால்
பிடி அவனை “போலிஸில்"
பக்கத்தூர் தாமரைக்குளம் ரோடு பளிச்சென இருக்கு தென்று
சொல்லாத ஆளே இல்லை........நம்ம ஊர்
ரோட்டை பத்தி கேட்கத்தான் நாதியில்லை.......
பஸ்ஸ்டாண்டில் நின்னுக்கிட்டு புறம் பேச நேரம் உண்டு
“கடற்கரையையும்" விற்பதற்கு V.A.Oவை பார்ப்பதுண்டு
வெட்டிப் பேச்சு பேசி டயலாக் விடுவதுண்டு
சிங்காரப் புதுமடமாக மாற சிந்திக்க யார் உண்டு ?
இளைஞர்களே - நீங்கள் உண்டுபாருங்கள் படத்தை
தட்டிக் கேளுங்கள் அரசாங்கத்தை.............
தேர்தல் வருகிறது - விழிப்போம்
கவிதை
-புதுமடம்.mn -யு . ஏ . இ
சுகாதாரம்ஒருகேள்விக்குறி,
இந்தகாட்சி புதுமடம்.முகப்பு. இந்தபுகைப்படம்ஊர்மக்களுக்குதெரிவிப்பதற்க்காகத்பதிவுசெய்யப்படுகிறது.
18/07/2010
புதுமடம்மாணவனுக்கு அடிஉதை!18/7/2010
அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவன் முஹம்மது உச்சிப்புளியில் வைத்து நாகாச்சி கயவர்களால்அடித்துஉதைக்கப்பட்டுள்ளார்.
அதன்விபரம்வருமாறு: 16/07/2010 அன்று
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளியில்11ம்வகுப்புபடிக்கும்மாணவர்களுக்குமத்தியில்பிரச்சினை
ஏற்ப்பட்டுள்ளது இப்பிரச்சினையில்நாகாச்சி மாணவனுக்கு சிரிய காயம் ஏற்ப்பட்டதாக தெரிகிறத(கீழவிழுந்ததினால்ஏற்ப்பட்டகாயம்எனசொல்லப்படுகிறது.)
இப்பிரச்சினைக்குஅடுத்தனால்(17/7/2010)அதே11ம்வ்குப்பில்படிக்கும்மாணவன்உசிப்புளி
சென்றுள்ளான்.அந்தநேரம்நாகாச்சிமாணவன் இவனைப்பார்த்துவிட்டு ஓடிச்சென்று நாகாச்சிரௌடிகளானடிரைவர்களிடம்.என்னைஅடித்ததுலுக்கப்பயல்களிலில் இவனும்தான்என்றுஇந்தமாணவனைகாட்டவும்ரவுடிக்கும்பல்அடித்துஉதைத்துஎச்சரிக்கையும்
செய்துஅனுப்பிஇருக்கிறான்கள்அதுஎன்னஎச்சரிக்கைஎன்றால்எந்ததுலுக்கப்பயலும்எந்த
துலுக்கச்சியும்உச்சிப்புளிவரமுடியாது.வந்தால்அடிப்பதுமட்டும்இனிசெய்யமாட்டோம்அதற்க்கும்
மேலே இனிசெய்வோம்.என்றுசொல்லிஅனுப்பியிருக்கிறான்கள் நாகாச்சிகயவர்கள்.
திங்கள்கிழமைஇதன்எதிரொளிதெரியும்எனதெரிகிறது.இதற்கு.அமைப்புகள்என்னசெய்யப்
போகிறது?
11/07/2010
பெற்றோர் ஆசிரியர் கூட்டனி? புதுமடம்.11/7/2010
புதுமடம்அரசுஉயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்ப்போதயபெற்றோர்ஆசிரியர்
கழகத்தின்செயல்பாடுதிருப்தியானநிர்வாகமாகஇல்லைஎன்பதுபுதுமடத்தில்
உள்ளபெரும்பான்மையானகருத்தாகஉள்ளது.தற்ப்போதயநிர்வாகத்தால்
மாணவர்களையேகுறைசொல்லிவருகிறார்கள்.காரனம்அந்தப்பள்ளிக்கூடத்தில்
படிப்பதுபெரும்பான்மையானமாணவமாணவிகள்நமதுசமுதாயஉறவினர்கள்
ஆனால்நிர்வாகிகளோ?எதிர்மறையானகருத்துடையவர்கள்.என்னதான் மாமா மச்சான் என்றுவெளிப்பார்வைக்கு நம்மோடு உறவாடிக்
கொண்டாலும்உள்ளுக்குள் மாற்றான கருத்து(தன்சார்ந்தமதவெறி)தான்
இருக்கும்.இதுஇயற்கையே!ஆக தற்போதய பெற்றோர்ஆசிரியர்கழகத்தை
கலைத்துவிட்டு அல்லது ஆகஸ்ட்மாதம் புதியபெற்றோர் ஆசிரியர் நிர்வாகிகள் தேர்வுசெய்யப்படும்போது புதியவர்கள்களை (நம்மவர்களாக)
தேர்வுசெய்ய பரிந்துரைக்கவேண்டும். பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய
மாணவ மாணவிகளின்நலன் மற்றும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தக்கூடிய
நிர்வாகிகளை தேர்வுசெய்யப்படவேண்டியதுஅவசரகாலகடமையாக கருதி
ஒவ்வொரு நபரும் மேற்கண்ட விபரங்களை தன் சார்ந்த அமைப்பு களிடமோ அல்லது ஜமாத் நிர்வாகத்திடமோ தெரியப்படுத்தவேண்டும்.
வேண்டுகோள் வைக்கப்படவேண்டும்.புதுமடத்தில் இயங்கும் சமுதாய அமைப்புகளான த.மு.மு.க. TNTJ மூன்று ஜமாத் நிர்வாகம் மற்றும் விடியல்வெள்ளி.ஆகிய அமைப்புகளுக்கு அமீரகத்தில் இயங்கும் PIWA.இதுவிசயமாக கோரிக்கை வைத்து கடிதம் அனுப்ப வேண்டும்.இன்ஷா அல்லாஹ் புதிய நிர்வாகிகள் தேர்வு விசயத்தில் அமீரக சகோதரர்கள் துரிதமாக செயல்படுவார்கள் .என நம்புவோமாக..
27/06/2010
புறம்போக்கு நிலங்களை மீட்போம்----முத்தகீன்.B.A.
என்னருமை இளைய சமுதயமே தரவையை விற்ற கயவர்களை இப்போது இனம் கண்டது புதுமடம் பல ஏக்கர் பரப்பளவு புறம் போக்கை அப்பன் - பாட்டன் நிலங்களை என புழுகாய் விற்று வாயிலும் - வங்கியிலும் போட்டனர்...
அரசியலில் - பதவிகளில் இருப்பவர்கள் இருந்தவர்கள் பணம் படைத்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஏப்பம் விட்டு இப்போது அடியாட்களாய் மாறுகின்றனர்.
ஆர்.ஐ, வி.ஏ.ஒ, இதர அதிகாரிகள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பணத்தை இறைத்து (இவர்களை பொதுநல வழக்கு மூலம் சந்திப்போம் வரைவில்) பல கோடி பெறுமான அரசு புறம்போக்கு நிலங்களை விலைக்கு விற்று, புரோக்கர்கள் மூலம் விற்பதற்க்கும் உள்ளனர்.
புறப்படு இளைய சமுதாயமே ! யுத்தம் என புறப்படு ! உனது தோல் வலிமையும் பேனா வலிமையும் இருக்கும் வரை புறப்படு !
இப்படித்தான் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தானம் கொடுத்த மூன்று ஏக்கர் நாற்பது செண்டை இந்த கயவர்கள் அப்பன் - பாட்டன் என பெயர் சொல்லி விற்றார்கள்.
அப்போது நாம் தூங்கினோம் இப்போது அடிவயிற்றில் கைவைப்பது போல தரவையையும் - ஊரணியையும் - கடற்கரையையும் விற்கும் கும்பல்.
நமதூருக்கு பேருந்து நிலையம் இல்லை, ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த இடம் இல்லை, நூலகத்திற்கு நிலம் இல்லை, மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை ஊருக்கு தேவையான எதுவும் இல்லை.
எப்படி இருக்கும் ஊரை விற்று வாயிலும் - வயிற்றிலும் போட்டாகி விட்டதே.
நாளைய வரலாற்றில் தரவை என்பது யாருக்கும் தெரியாது, தரவை இருப்பதனால்தான் மழை நீர் தேங்கி கோடையில் ஓரளவு தண்ணீர் நமதூரில் கிணறுகளில் உள்ளது. தரவை இல்லை என்றால் நிலத்தடி நீர் வற்றிப் போகும்.
இளைய சமுதாயமே உன்னால் முடியும் கோசங்களை போடு........
தரவையை விற்ற கயவர்கள் என விளம்பரப்படுத்து.............
தலைமைச் செயலகம் -சென்னை,
மாண்புமிகு : முதல்மைச்சர்,
பொதுப்பணித்துறை - ஊரகவளர்ச்சித்துறை,
மாண்புமிகு : உதவி முதலமைச்சர் ஸ்டாலின்,
கோட்டாச்சியர், வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர்,
என “போஸ்ட்கார்ட்டு போர்” விடாமல் அனுப்பு, தரவை 100, 100/1, 100/2 என்ற உட்பிரிவுகளில் மாணவர் விளையாட்டு மைதானம் என்ற போர்ட்டை வைத்து அதனை போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பு .
உன்னால் முடியும் தம்பி- சாதிப்பாய் தரவையை விற்ற கயவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள்.
நானும் உன்னுடன்
-முத்தக்கீன் -





.jpg)
.jpg)