தினம் ஒரு ஹதீ்ஸ்..8/3/2011

அஸ்ஸலாமு அலைக்கும்,வரஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே!சகோதரர்களே மனிதநேயமக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தோல்வியடையவைப்பதே tntj வின்கொள்கை என பிஜே அறிவித்துள்ளார் ஆனால் உன்மையான தவ்கீத்வாதிகள் பிஜே கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை தவ்ஹீத் ஒன்றும் பிஜே தனிப்பட்ட (விரோத)கொள்கையில்லை என்பதில் தெளிவாக உள்ளனர் ஆனால் சில அறிவுஜீவிகள் பிஜே சொல்வதுதான் சரி அவர்சொல்லுவதுமட்டும்தான் உன்மை என்று நம்பி அவரை பின்பற்றும் சிலர் சிந்தியுங்கள் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கூட எதுக்கவேண்டும் என்று கண்டனதீர்மானம் கொண்டுவராத பிஜே மனிதநேயமக்கள் கட்சியை தோல்வியடையவைப்பதுதான் பிறவிபயன் என அறிவித்துள்ள பிஜே புத்தி சரியாக செயல்படுகிறதா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.உங்கள் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் ..தேதி:8/3/2011......

நீங்கள் இறந்தபின்....

..நீங்கள் இறந்தபின்பும் நண்மையைபெறக்கூடியமூன்று காரியங்கள்..1.நிலையானதர்மம்...2,பயனுள்ளகல்வி....3,உங்களுக்காக பிரார்த்தனைசெய்யக்கூடிய ஸாலிகானகுழந்தை.(நபிமொழி) இனைவைத்தல்..வரதட்சனை..வட்டி..விபச்சாரம்.ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் முஸ்லீம்கள் அல்ல!

27/06/2010

புறம்போக்கு நிலங்களை மீட்போம்----முத்தகீன்.B.A.

தரவையை மீட்போம் புறம்போக்கு நிலங்களை காப்போம் சிங்கமென வீதிக்கு வா இளைஞர்களே யுத்தம் என போராடு.....



என்னருமை இளைய சமுதயமே தரவையை விற்ற கயவர்களை இப்போது இனம் கண்டது புதுமடம் பல ஏக்கர் பரப்பளவு புறம் போக்கை அப்பன் - பாட்டன் நிலங்களை என புழுகாய் விற்று வாயிலும் - வங்கியிலும் போட்டனர்...

அரசியலில் - பதவிகளில் இருப்பவர்கள் இருந்தவர்கள் பணம் படைத்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஏப்பம் விட்டு இப்போது அடியாட்களாய் மாறுகின்றனர்.

ஆர்.ஐ, வி.ஏ.ஒ, இதர அதிகாரிகள் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் என பணத்தை இறைத்து (இவர்களை பொதுநல வழக்கு மூலம் சந்திப்போம் வரைவில்) பல கோடி பெறுமான அரசு புறம்போக்கு நிலங்களை விலைக்கு விற்று, புரோக்கர்கள் மூலம் விற்பதற்க்கும் உள்ளனர்.

புறப்படு இளைய சமுதாயமே ! யுத்தம் என புறப்படு ! உனது தோல் வலிமையும் பேனா வலிமையும் இருக்கும் வரை புறப்படு !

இப்படித்தான் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தானம் கொடுத்த மூன்று ஏக்கர் நாற்பது செண்டை இந்த கயவர்கள் அப்பன் - பாட்டன் என பெயர் சொல்லி விற்றார்கள்.

அப்போது நாம் தூங்கினோம் இப்போது அடிவயிற்றில் கைவைப்பது போல தரவையையும் - ஊரணியையும் - கடற்கரையையும் விற்கும் கும்பல்.

நமதூருக்கு பேருந்து நிலையம் இல்லை, ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த இடம் இல்லை, நூலகத்திற்கு நிலம் இல்லை, மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை ஊருக்கு தேவையான எதுவும் இல்லை.

எப்படி இருக்கும் ஊரை விற்று வாயிலும் - வயிற்றிலும் போட்டாகி விட்டதே.

நாளைய வரலாற்றில் தரவை என்பது யாருக்கும் தெரியாது, தரவை இருப்பதனால்தான் மழை நீர் தேங்கி கோடையில் ஓரளவு தண்ணீர் நமதூரில் கிணறுகளில் உள்ளது. தரவை இல்லை என்றால் நிலத்தடி நீர் வற்றிப் போகும்.

இளைய சமுதாயமே உன்னால் முடியும் கோசங்களை போடு........

தரவையை விற்ற கயவர்கள் என விளம்பரப்படுத்து.............

தலைமைச் செயலகம் -சென்னை,

மாண்புமிகு : முதல்மைச்சர்,

பொதுப்பணித்துறை - ஊரகவளர்ச்சித்துறை,

மாண்புமிகு : உதவி முதலமைச்சர் ஸ்டாலின்,

கோட்டாச்சியர், வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர்,

என “போஸ்ட்கார்ட்டு போர்” விடாமல் அனுப்பு, தரவை 100, 100/1, 100/2 என்ற உட்பிரிவுகளில் மாணவர் விளையாட்டு மைதானம் என்ற போர்ட்டை வைத்து அதனை போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பு .

உன்னால் முடியும் தம்பி- சாதிப்பாய் தரவையை விற்ற கயவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள்.



நானும் உன்னுடன்

-முத்தக்கீன் -

16/06/2010

விவகாரத்து அதிகரிக்க காரனம்

நமது ஊரில் விவகாரத்து ஏன் அதிகரிக்கிறது என்னகாரணம் விவகாரத்து செய்யும் பென்கள் சொல்லக்கூடிய காரணம் ஆன்மையில்லை என்பதுதான்.
இது எத்தனைதூரம் உன்மை? எனநினைக்கிறீர்கள்,

2011.பஞ்சாயத்துத்தேர்தலில்......

எல்லாப் புகழும் இறைவனுக்கே
பஞ்சாயத் தேர்தலில் நிற்க நான் தயார்

என்னருமை இளைய சமுதாயமே.........
உனது தோல் வலிமையும், ஆதரவு கிடைத்தால்.........

இளைஞர்களும்-மாணவர்களும் களத்தில் இறங்கினால் புது புரட்சி வெடிக்கும்....


வெற்றி கிடைக்கும்.......அடுதுத்து வர இருக்கின்ற புதுமடம் பஞ்சாயத் தேர்தலில்

(இன்ஷா அல்லாஹ்) நான் போட்டியிட நினைத்துள்ளேன் .....